காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட்: இந்தியா- பாகிஸ்தான் போட்டியில் மழையால் டாஸ் போடுவதில் தாமதம்

காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட் போட்டியில் இன்று இந்திய அணி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.
காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட்: இந்தியா- பாகிஸ்தான் போட்டியில் மழையால் டாஸ் போடுவதில் தாமதம்
Published on

பர்மிங்காம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தொடக்க விழா நேற்று முன் தினம் முடிவடைந்த நிலையில் இரண்டாம் நாளான நேற்று பல்வேறு விளையாட்டு போட்டிகள் தொடங்கி நடைபெற்றன.

இந்த நிலையில் இன்று நடைபெறும் பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ள ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தனது 2வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது.

இந்த போட்டியின் குறுக்கே மழை பெய்ததன் காரணமாக தற்போது டாஸ் போடுவது தாமதமாகியுள்ளது. வானம் தெளிவான பிறகு டாஸ் போடப்பட்டு போட்டி தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com