காமன்வெல்த் ஸ்குவாஷ் போட்டி : இந்தியாவின் சுனய்னா குருவில்லா அரையிறுதிக்கு தகுதி

இலங்கையின் சனித்மா சினாலியை வீழ்த்தி சுனய்னா வெற்றி பெற்றார்.
Image Courtesy : @Media_SAI
Image Courtesy : @Media_SAI
Published on

பர்மிங்காம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்தியா இதுவரை மூன்று தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்களை வென்றுள்ளது.

4-வது நாளான இன்று பல்வேறு விளையாட்டுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். இதுவரை இன்றைய நாளின் சிறப்பம்சமாக லான் பவுல்ஸ் போட்டியில் இந்திய மகளிர் அணி முதல் முறையாக இறுதி போட்டிக்குள் நுழைந்து பதக்கத்தை உறுதி செய்து வரலாறு படைத்துள்ளது.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற ஸ்குவாஷ் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டியில் இந்திய வீராங்கனை சுனய்னா சாரா குருவில்லா வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். சுனய்னா 11-3, 11-2, 11-2 என்ற செட் கணக்கில் இலங்கையின் சனித்மா சினாலியை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com