

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ஆக்லாந்தில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா- நியூசிலாந்து மோதும் 2-வது ஒருநாள் போட்டி வெலிங்டனில் உள்ள ஹென்றி ஸ்டேடியத்தில் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது.
இந்த போட்டிக்கான டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. வெலிங்டனில் மழை பெய்து வருவதால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.
மழை நின்ற பின் போட்டி தொடங்கியது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.போட்டி 47 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பேட்டிங் செய்த நியூசிலாந்து அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் வில் யங் 6 ரன்களிலும், டிம் செய்ஃபர்ட் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். ஹென்றி நிக்கோல்ஸ் 11 ரன்களில் வெளியேறினார். இதனால் நியூசிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் குர்னூர் பிரார் சிறப்பாக பந்துவீசி நியூசிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்தார். அவரது துல்லியமான பந்துவீச்சில் டாம் லாதம் 7 ரன்களிலும், கிளென் பிலிப்ஸ் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். இதற்கிடையே டேரில் மிட்செல் மற்றும் கேப்டன் மிட்செல் சான்ட்னர் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டனர். மிட்செல் அரைசதம் கடந்து 55 ரன்களும், சான்ட்னர் 31 ரன்களும் எடுத்தனர்.
இதனால் நியூசிலாந்து அணி 41 ஓவர்களில் 134 ரன்களில் ஆட்டமிழந்தது. இந்திய அணியில் குர்னூர் பிரார் 4 விக்கெட் வீழ்த்தினார்.
குர்னூர் பிரார் கட்டுக்கோப்பாக பந்துவீசி முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியதால் நியூசிலாந்து அணி ரன் குவிக்க முடியாமல் திணறியது. இந்திய பந்துவீச்சாளர்களின் சிறப்பான செயல்பாட்டால் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து நெருக்கடியில் சிக்கியது.