2-வது தகுதி சுற்று: திருச்சி-கோவை இன்று மோதல்

இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் திருச்சி கிராண்ட் சோழாஸ்- கோவை கிங்ஸ் அணிகள் மல்லுகட்டுகின்றன.
2-வது தகுதி சுற்று: திருச்சி-கோவை இன்று மோதல்
Published on

சென்னை,

10-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியின் லீக் சுற்று முடிவில் 'டாப்-4' இடங்களை பிடித்த மதுரை பாந்தர்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ், கோவை கிங்ஸ், நடப்பு சாம்பியன் திருப்பூர் தமிழன்ஸ் ஆகிய அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறின.

இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் மதுரை பாந்தர்ஸ்-திருச்சி கிராண்ட் சோழாஸ் மோதிய ஆட்டம் மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது. இதனால் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்ததன் அடிப்படையில் மதுரை அணி இறுதிப்போட்டியை எட்டியது. இதேபோல் வெளியேற்றுதல் சுற்றில் திருப்பூர் தமிழன்ஸ்- கோவை கிங்ஸ் மோதிய ஆட்ட மும் மழையால் கைவிடப்பட்டது. புள்ளி பட்டியலில் திருப்பூரை விட முன்னிலை பெற்று 3-வது இடம் வகித்ததால் கோவை அணி 2-வது தகுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.

இன்று (புதன்கிழமை) நடைபெறும் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் திருச்சி கிராண்ட் சோழாஸ்- கோவை கிங்ஸ் அணிகள் மல்லுகட்டுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி வருகிற 28-ந் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் மதுரை பாந்தர்சை எதிர்கொள்ளும். தோல்வி அடையும் அணி வெளியேறும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com