

கிறிஸ்ட்சர்ச்,
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது 20 ஓவர் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லே ஓவல் ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்திய அணியில் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இரண்டாவது டி20 போட்டியில், வைபவ் சூர்யவன்ஷி அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது என பேட்டிங் பயிற்சியாளர் கோடாக் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
இஷான் கிஷனுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. அதனால்தான் திலக் வர்மா முன்கூட்டியே பேட்டிங் செய்யக் களமிறக்கப்பட்டார். இரண்டாவது டி20 போட்டியிலும் இஷான் கிஷன் விளையாடுவது சந்தேகமாக உள்ளது. அவர் விளையாடவில்லை என்றால், வைபவ் சூர்யவன்ஷி அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.என தெரிவித்தார்.