2-வது 20 ஓவர் போட்டி; இந்தியா - நியூசிலாந்து இன்று மோதல்

முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து 225 ரன்கள் குவித்த போதிலும் அதை இந்திய அணிஎட்டிப்பிடித்தது
 2-வது 20 ஓவர் போட்டி; இந்தியா - நியூசிலாந்து இன்று மோதல்
Published on: 

கிறிஸ்ட்சர்ச்,

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் கிறைஸ்ட்சர்ச்சில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி இதே மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது.

முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து 225 ரன்கள் குவித்த போதிலும் அதை இந்திய அணி சஞ்சு சாம்சன் (67 ரன்), கேப் டன் ஸ்ரேயாஸ் அய்யர் (42 ரன்), நமன் திர் (42 ரன்) ஆகியோரது அதிரடியால் 19.4 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்தியா 220 ரன்னுக்கு மேலான இலக்கை விரட்டிப்பிடித்தது இதுவே முதல் முறையாகும். பந்து வீச்சு தான் இந்தியாவுக்கு தொடர்ந்து கவலைக்குரியதாக இருக்கிறது. ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாக இருந்தா லும் இன்னும் துல்லியமாக பந்து வீசி எதிரணியின் ரன்வேகத்தை கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகும்.

இஷான் கிஷன் இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயத்தால் 2-வது ஆட்டத்தில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி களம் காணுகிறார். அவரது மின்னல் வேக பேட்டிங்கை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

நியூசிலாந்து அணி முதல் ஆட்டத்தில் பந்து வீச்சு மற்றும் பீல்டிங்கில் தடுமாறியது. குறிப்பாக 4 கேட்ச் வாய்ப்புகளை கோட்டை விட்டது அவர்களுக்கு பின்னடைவாக அமைந்தது. இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்துவார்கள். போட்டி உள்ளூர் நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்குவதால் பனிப்பொழிவின் தாக்கம் அதிகமிருக்கும். பந்து ஈரமா கும் போது, சரியாக பிடித்து வீசுவது சிரமம். அதனால் 2-வது பேட் செய்வதே எளிதாக இருக்கும். எனவே டாஸ் ஜெயிக்கும் அணி 2-வது பேட்டிங்குக்கே முன்னுரிமை அளிக்கும்.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com