2வது டி20: பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி

டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
2வது டி20: பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி
Published on

கொழும்பு,

இலங்கை, பாகிஸ்தான் மகளிர் அணிகளுக்கு இடையேயான 2வது டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்றது. இதில் இலங்கை வெற்றிபெற்றது.

பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற புள்ளிகள் கணக்கில் இலங்கை கைப்பற்றியது.

இதையடுத்து நேற்று முன் தினம் நடந்த முதல் டி20 போட்டியில் பாகிஸ்தானை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை வெற்றிபெற்றது.

2வது டி20

இந்நிலையில், இலங்கை - பாகிஸ்தான் இடையேயான 2வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. தம்புலாவில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஷாவல் அதிகபட்சமாக 48 ரன்கள் எடுத்தார்.

இலங்கை வெற்றி

இதனை தொடர்ந்து 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை 17.4 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் பாகிஸ்தானை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அபார வெற்றிபெற்றது. சிறப்பாக ஆடிய இலங்கையின் சஞ்சனா அதிகபட்சமாக 46 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற புள்ளி கணக்கில் இலங்கை கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டி20 நாளை மறுதினம் நடைபெற உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com