2வது டி20 போட்டி; பெர்குசன் அபார பந்துவீச்சு - ஆஸ்திரேலியா 174 ரன்களில் ஆல் அவுட்

நியூசிலாந்து தரப்பில் அபாரமாக பந்துவீசிய பெர்குசன் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on: 

ஆக்லாந்து,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலாவதாக டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதலாவது டி20 ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.

இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி ஆக்லாந்தில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் களம் இறங்கினர்.

இதில் ஸ்மித் 11 ரன்களில் அவுட் ஆனார். இதையடுத்து களம் இறங்கிய மிட்செல் மார்ஷ் 26 ரன், மேக்ஸ்வெல் 6 ரன், இங்கிலிஸ் 5 ரன், டேவிட் 17 ரன் எடுத்து அவுட் ஆகினர். மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹெட் 45 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

இறுதியில் ஆஸ்திரேலிய அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 174 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து தரப்பில் அபாரமாக பந்துவீசிய பெர்குசன் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 175 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து ஆடி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com