2வது டி20 போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு

முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.
Image Courtesy: @ZimCricketv
Image Courtesy: @ZimCricketv
Published on

ஹராரே,

சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் 13 ரன் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி கண்டது.

இதையடுத்து ஜிம்பாப்வே அணி 1-0 என தொடரில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி ஹராரேவில் இன்று நடைபெறுகிறது. இதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. இந்திய அணியில் கலீல் அகமது-க்கு பதிலாக சாய் சுதர்சன் அறிமுக வீரராக  இடம் பெற்றுள்ளார். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com