55 பவுண்டரி, 8 சிக்சர்... 126 பந்துகளில் 306 ரன்கள் - உலகை திரும்பி பார்க்க வைத்த பீகாரின் 15 வயது வீராங்கனை

பீகாரை சேர்ந்த இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளார்.
அக்சரா
Published on

பாகல்பூர்,

வைபவ் சூர்யவன்ஷியை தொடர்ந்து, பீகாரை சேர்ந்த மற்றொரு இளம் வீராங்கனை தனது அதிரடி பேட்டிங்கால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

யு-19 ஒருநாள் தொடர்

பாகல்பூரில் உள்ள சாண்டிஸ் காம்பவுண்ட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற பிசிஏ மகளிர் யு-19 ஒருநாள் கோப்பை தொடரில் (BCA Women's U-19 One-Day Trophy), பீகார் அணியின் இளம் வீராங்கனை அக்சரா ஆட்டமிழக்காமல் 306 ரன்கள் குவித்து அசத்தினார்.

126 பந்துகளில் 306 ரன்கள்

அதிரடியாக விளையாடிய அக்சரா, வெறும் 126 பந்துகளில் 306 ரன்கள் விளாசினார். 55 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்சர்களுடன் வெறும் 16 பந்துகளில் அரைசதத்தையும், 34 பந்துகளில் சதத்தையும் பூர்த்தி செய்து அசத்தினார்.

15 வயதில் கேப்டன்

15 வயதான அக்சரா, பீகாரின் கிழக்கு சம்பாரன் மாவட்டத்தில் உள்ள ரக்ஸால் பகுதியை சேர்ந்தவர். தற்போது பீகார் யு-19 மகளிர் அணியின் கேப்டனாக இருந்து வருகிறார்.

வைபவ் சூர்யவன்ஷி

பீகாரை சேர்ந்த மற்றொரு இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி தற்போது இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளார். பீகார் கிரிக்கெட்டில் இருந்து அடுத்தடுத்து இளம் வீரர்கள் தேசிய மற்றும் சர்வதேச அரங்கில் கால்பதிப்பது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com