

புதுச்சேரி,
இந்தியா ஏ – ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று புதுச்சேரியில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா ஏ அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. இதையடுத்து இந்தியா ஏ அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா ஏ அணி வெற்றி பெற்றது. முதல் போட்டியில் 125 ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் 69 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்ற அந்த அணி, 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது.
தொடரை ஏற்கெனவே இழந்துள்ள இந்தியா ஏ அணி, கடைசி போட்டியில் வெற்றி பெற்று ஆறுதல் தேடும் முனைப்பில் களமிறங்குகிறது. மறுபுறம், தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றும் நோக்கில் ஆஸ்திரேலியா ஏ அணி விளையாட உள்ளது.