

புதுடெல்லி,
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இதனை தொடர்ந்து நடைபெற்ற 2 டி20 போட்டிகளில் முதல் போட்டியில் இந்தியாவும், 2வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றிபெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 3வது டி20 போட்டி மத்தியபிரதேசத்தின் இந்தூரில் இன்று நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஷாய் ஹோப் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.