3வது டி20 போட்டி: இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு...!

முதல் இரு ஆட்டங்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என முன்னிலையில் உள்ளது.
Image Courtesy: @BCCI
Image Courtesy: @BCCI
Published on

கயானா,

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரில் முதல் இரு ஆட்டங்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் தோல்வியை தழுவினால் தொடரை இழக்க நேரிடும் என்பதால் வெற்றிக்காக இந்திய அணி கடுமையாக போராடும், அதே வேளையில் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களம் இறங்கும். அதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

இந்நிலையில் இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாசில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அறிமுக வீரராக இடம் பிடித்துள்ளார். 

X

Daily Thanthi
www.dailythanthi.com