3-வது டெஸ்ட் - இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.
3-வது டெஸ்ட் - இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து
Published on

நாட்டிங்காம்,

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் இரண்டு டெஸ்ட்கள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று, தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது.

நியூசிலாந்து 438 ரன்கள்

இரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்து, முதல் இன்னிங்சில் 438 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.

இங்கிலாந்து 354 ரன்கள்

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 88.2 ஓவர்களில் 354 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இதனையடுத்து 84 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து, 288 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

தொடரை வென்றது

இதையடுத்து 373 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. ஆனால் நியூசிலாந்து அணியின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல், இங்கிலாந்து அணி 212 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 160 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த தொடரின் முதல் போட்டியில் தோல்வியடைந்த போதிலும், அடுத்த இரண்டு போட்டிகளிலும் கம்பேக் கொடுத்து நியூசிலாந்து அணி தொடரை வென்றுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com