பாகிஸ்தானுக்கு எதிராக சிக்சர் மழை - யுவராஜ் சிங் சாதனையை சமன் செய்த அபிஷேக் சர்மா

ஆண்கள் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின.
அபிஷேக் சர்மா
Published on: 

ஐச்சி-நகோயா,

பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த யுவராஜ் சிங்கின் சாதனையை அபிஷேக் சர்மா சமன் செய்தார்.

சாதனை

ஆசிய விளையாட்டுப் போட்டி ஜப்பானில் ஐச்சி–நகோயாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் அபிஷேக் சர்மா 7 சிக்ஸர்கள் அடித்தார்.

இதன் மூலம் இந்தியா-பாகிஸ்தான் டி20 போட்டிகளில் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் யுவராஜ் சிங்குடன் முதலிடத்தை அபிஷேக் சர்மா பகிர்ந்து கொண்டார். யுவராஜ் சிங் 2012-இல் அகமதாபாத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக 7 சிக்ஸர்களை விளாசியிருந்தார்.

தங்கம்

இறுதிப்போட்டியில் அபிஷேக் 61 ரன்கள் (28 பந்துகள்) எடுத்தார். இதன் மூலம் இந்தியா 20 ஓவர்களில் 211/6 என்ற வலுவான ஸ்கோரைப் பதிவு செய்தது. தொடர்ந்து இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 192 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்தியா 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தங்கம் வென்றது.

X

Daily Thanthi
www.dailythanthi.com