ஆசிய கோப்பை: டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங் தேர்வு

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது.
Image Courtesy: @ACCMedia1
Image Courtesy: @ACCMedia1
Published on

அபுதாபி,

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஏ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரக அணிகளும், பி பிரிவில் இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும். இந்த தொடரில் இதுவரை 8 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன. இந்த ஆட்டங்களின் முடிவில் சூப்பர் 4 சுற்றுக்கு இந்திய அணி மட்டும் தகுதி பெற்றுள்ளது.

இதில் இன்று நடைபெறுகின்ற 9-வது லீக் ஆட்டத்தில் குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள ஆப்கானிஸ்தான்- வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் தலா 2 புள்ளிகளுடன் உள்ள நிலையில் இதில் வெற்றி பெறும் அணி ஏறக்குறைய சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெற்று விடும் என்பதால் இந்த ஆட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com