ஆசிய கோப்பை கிரிக்கெட் - இந்தியாவை வென்ற பாகிஸ்தான்

314 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் இந்திய ‘ஏ’ அணி களமிறங்கியது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் -  இந்தியாவை வென்ற  பாகிஸ்தான்
Published on: 

வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 8-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் இந்தியாவை வென்றது.

இந்தியா 'ஏ' - பாகிஸ்தான் 'ஏ'

வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) தொடர் கத்தார் தலைநகர் தோகாவில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

இந்த தொடரின் 8-வது லீக் ஆட்டத்தில் இந்தியா 'ஏ' அணி - பாகிஸ்தான் 'ஏ' அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் 'ஏ' அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

பாகிஸ்தான் 313 ரன்கள் குவிப்பு

அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 313 ரன்கள் எடுத்தது.

பாகிஸ்தான் அணியில் ஹசன் நவாஸ் 79 ரன்களும், மாஸ் சாதகத் 59 ரன்களும், பர்ஹான் யூசுப் 56 ரன்களும் எடுத்தனர். ஷமில் ஹுசைன் 33 ரன்களும், அப்துல் சமத் 28 ரன்களும், முகமது இம்ரான் ரந்தாவா 23 ரன்களும் சேர்த்தனர்.

இந்திய பந்துவீச்சு

இந்திய அணியின் சார்பில் ஹர்ஷித் ராணா, சூர்யன்ஷ் ஷெட்ஜ், விப்ராஜ் நிகாம், பிரின்ஸ் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆயுஷ் பதோனி 1 விக்கெட் கைப்பற்றினார்.

இந்தியா தடுமாற்றம்

இதையடுத்து 314 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் இந்திய ‘ஏ’ அணி களமிறங்கியுள்ளது. சூர்யவன்ஷி 11 ரன்களுடனும், அடுத்து வந்த ஆயுஷ் பதோனி டக் அவுட்டும் ஆக இந்தியா 27 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. அபிஷேக் சர்மா - கேப்டன் திலக் வர்மா களத்தில் உள்ளனர். உலகக்கோப்பை ஒருநாள் தொடருக்கு இந்திய அணியைத் தேர்வு செய்யும் விதமாக பிசிசிஐ தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இந்திய அணி 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 265 ரன்கள் எடுத்தது. பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

X