ஆசிய கோப்பை: இந்த அணிதான் சாம்பியன் பட்டம் வெல்லும் - இந்திய முன்னாள் வீரர் கணிப்பு

image courtesy:ICC
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது.
மும்பை,
நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நேற்று தொடங்கியது. இதன் முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - ஹாங்காங் அணிகள் மோதின. இதில் ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. இதில் இன்று நடைபெறுகின்ற 2-வது ஆட்டத்தில் இந்தியா - யுஏஇ அணிகள் மோதுகின்றன.
முன்னதாக இந்த தொடரில் வெற்றி பெற வாய்ப்புள்ள அணி குறித்தும், அதிக ரன் மற்றும் விக்கெட்டுகள் வீழ்த்த வாய்ப்புள்ள வீரர்கள் குறித்தும் பல முன்னாள் வீரர்கள் தங்களது கணிப்பினை வெளிப்படுத்தினர். அந்த வரிசையில் இந்திய முன்னாள் வீரரான தினேஷ் கார்த்திக் இந்த தொடரில் சாம்பியன் பட்டம் வெல்ல வாய்ப்புள்ள அணி குறித்து தனது கணிப்பினை வெளிப்படுத்தி உள்ளார்.
அவரது கணிப்பின் படி, இந்த ஆசிய கோப்பையை இந்திய அணி கைப்பற்றும் என்று கூறியுள்ளார்.






