விராட் கோலியை முந்திய பாபர் அசாம்… கிறிஸ் கெயிலின் மாபெரும் டி20 சாதனை முறியடிப்பு

இதற்கு முன் இந்த சாதனை கிறிஸ் கெயில் வசம் இருந்தது.
விராட் கோலியை முந்திய பாபர் அசாம்… கிறிஸ் கெயிலின் மாபெரும் டி20 சாதனை முறியடிப்பு
Published on

கராச்சி,

பாகிஸ்தானின் முன்னணி பேட்ஸ்மேன் பாபர் அசாம் டி20 கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்துள்ளார். பாகிஸ்தான் சூப்பர் லீக் (பி.எஸ்.எல்) தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில், 12,000 ரன்களை வேகமாக எட்டிய வீரர் என்ற சாதனை படைத்தார்.

கராச்சியில் பெஷாவர் சால்மி அணிக்காக கராச்சி கிங்ஸ் அணிக்கு எதிராக தனது 338-வது இன்னிங்ஸிலும் விளையாடிய பாபர் அசாம், இந்த மைல்கல்லை எட்டினார்.

இதற்கு முன் இந்த சாதனை கிறிஸ் கெயில் வசம் இருந்தது. அவர் 343 இன்னிங்ஸ்களில் 12,000 ரன்களை எடுத்திருந்தார். இந்தியாவின் விராட் கோலி 360 இன்னிங்ஸ்களுடன் இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

Also Read
ஐபிஎல்: ஆவேஷ் கானும்... திரில் வெற்றிகளும்
விராட் கோலியை முந்திய பாபர் அசாம்… கிறிஸ் கெயிலின் மாபெரும் டி20 சாதனை முறியடிப்பு

இப்போட்டியில் பாபர் அசாம் 51 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 10 பவுண்டரிகளும் 2 சிக்ஸர்களும் அடங்கும். அவர் மற்றும் குசல் மெண்டிஸ் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 191 ரன்கள் சேர்த்து, அணியை 246/3 என்ற பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றனர். இதனையடுத்து 247 ரன்கள் என்ற இலக்கை துரத்திய கராச்சி கிங்ஸ் அணி 87 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com