வங்காளதேசத்திற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி... டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு

இது மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியாகும்.
வங்காளதேசத்திற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி... டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு
Published on

டாக்கா,

வங்காளதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று டாக்காவில் நடைபெறுகிறது. இப்போட்டி காலை 10.30 மணிக்கு தொடங்குகிறது. இந்நிலையில், இப்போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

2026 டி20 உலகக்கோப்பையில் பங்கேற்காத வங்கதேச அணி, தற்போது இருதரப்பு தொடர்களில் கவனம் செலுத்தி வருகிறது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில், ஒருநாள் போட்டிகளில் தனது பலத்தை நிரூபிக்க அந்த அணி முனைப்பு காட்டி வருகிறது.

Also Read
தொடர் தோல்விகளால் துவண்டு போன மும்பை... கேப்டன் ஹர்திக் பாண்டியா வேதனை
வங்காளதேசத்திற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி... டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை முடித்துவிட்டு, தற்போது ஒருநாள் தொடருக்கு நியூசிலாந்து அணி தயாராகியுள்ளது. ஒருநாள் போட்டிகளுக்காக சில மாற்றங்களுடன் புதிய பலத்துடன் அந்த அணி களம் இறங்குகிறது.

இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாகப் போராடும் என்பதால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. இது மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியாகும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com