இந்திய அணியில் புவனேஷ்வர் குமார் சவாலாக இருப்பார்: நியூசிலாந்து கேப்டன்

இந்திய இளம் பேட்ஸ்மேன் சூர்யவன்ஷி கடந்த தொடரில் (வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக) விளையாடவில்லை
புவனேஷ்வர் குமார்
Published on: 

கிறிஸ்ட்சர்ச்

நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஐந்து 20 ஓவர், 5 ஒரு நாள் மற்றும் இரண்டு டெஸ்டுகளில் விளையாடுகிறது. முதலில் 20 ஓவர் தொடர் நடத்தப்படுகிறது. இதன்படி இந்தியா -நியூசிலாந்து இடையி லான முதலாவது 20 ஓவர் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சி மேற்கொண்டனர். இந்த தொடர் தொடர்பாக நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சான்ட்னெர் கூறுகையில்

இந்திய இளம் பேட்ஸ்மேன் சூர்யவன்ஷி கடந்த தொடரில் (வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக) விளையாடவில்லை. அவர் ஐ.பி.எல். போட்டிகளில் எவ்வளவு ஆக்ரோஷமாக விளையாடுகிறார் என்பதை பார்த்து இருக்கிறோம். இந்த தொடரில் ஆடுகிறாரோ இல் லையோ எதிர்காலத்தில் இந்திய அணிக்காக சூர்யவன்ஷி முக்கிய பங்காற்றுவார் என்பதில் சந்தேக மில்லை. எனவே அவர் களம் இறங்கினால், அவரை கட்டுப்படுத்த சில திட்டங்கள் வைத்துள்ளோம். நியூ சிலாந்தில் உள்ள ஆடுகள சூழல் புவனேஷ்வர்குமார் மிகவும் விரும்புவார் என்று நினைக்கிறேன். பந்து வீச்சுக்கு சாதகமான அம்சம் ஏதேனும் காணப்பட்டால் அதை பயன்படுத்தி விக்கெட் வீழ்த்தும் திறன் அவ ருக்கு உண்டு. இந்தியாவின் பேட்டிங்குக்கு உகந்த ஆடுகளங்களில் கூட ஸ்விங் செய்வார். அதனால் இங்கு புதிய பந்தில் அவரது பந்துவீச்சு நியூசிலாந்து பேட்டர்களுக்கு சவாலாக இருக்கும். பந்து வீச்சாளர் கள் ஆதிக்கம் செலுத்தும் ஒரு போட்டியாக இது அமையும் என்று நம்புகிறேன்' என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com