அடுத்த 2- 3 போட்டிகளுக்கு புவனேஷ்குமார் விளையாட மாட்டார்: விராட் கோலி தகவல்

தசைப்பிடிப்பால் அவதிப்படும் புவனேஷ்குமார் அடுத்த 2 முதல் 3 போட்டிகளுக்கு விளையாட மாட்டார் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.
அடுத்த 2- 3 போட்டிகளுக்கு புவனேஷ்குமார் விளையாட மாட்டார்: விராட் கோலி தகவல்
Published on

மான்செஸ்டர்,

பாகிஸ்தானுக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியின் போது, இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் தனது 3-வது ஓவரை வீசினார். அப்போது இடது காலில் புவனேஷ்குமாருக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டது. வலியால் அவதிப்பட்ட அவர் அத்துடன் மைதானத்தை விட்டு வெளியேறினார்.

அதன் பிறகு அவர் பந்து வீசவரவில்லை. அவர் இல்லாத குறையை விஜய் சங்கர் பார்த்துக் கொண்டார். தசைபிடிப்பால் பாதிக்கப்பட்டுள்ள புவனேஷ்குமார், குறைந்தபட்சம் அடுத்த 2 போட்டிகளுக்கு விளையாட மாட்டார் என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். புவனேஷ்குமாருக்கு பதிலாக முகம்மது சமி விளையாடுவார் எனவும் கோலி தெரிவித்தார். இந்திய அணியின் முன்னணி பந்து வீச்சளர்களில் ஒருவரான புவனேஷ்குமார், தசைபிடிப்பால் விலகியிருப்பது இந்திய அணிக்கு லேசான பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இந்திய அணி, வரும் ஜுன் 22 ஆம் தேதி ஆப்கானிஸ்தான் அணியையும், மேற்கிந்திய தீவுகள் அணியை ஜூன் 27 ஆம் தேதியும், இங்கிலாந்து அணியை 30 ஆம் தேதியும் எதிர்கொள்கிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com