

பர்மிங்காம்,
இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ராபின்சன் 20-க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 19-க்கும் குறைவான பந்துவீச்சு சராசரியை பதிவு செய்து அரிய சாதனை படைத்துள்ளார்.
இந்த சாதனையை இதற்கு முன்பு 1914-ம் ஆண்டு இங்கிலாந்து பந்துவீச்சாளர் சிட்னி பார்ன்ஸ் பதிவு செய்திருந்தார். அதன் பிறகு 112 ஆண்டுகளாக இந்த மைல்கல்லை வேறு எந்த இங்கிலாந்து பந்துவீச்சாளரும் எட்டவில்லை.
தற்போது ராபின்சன் அந்த நீண்டகால சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்துள்ளார். இந்த பட்டியலில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவும் இடம்பெற்றுள்ளார்.
இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, இங்கிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் முதல் இன்னிங்ஸில் 133 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
பின்னர் முதல் இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி 453 ரன்கள் குவித்தது. இதன் மூலம் பாகிஸ்தானை விட 320 ரன்கள் முன்னிலை பெற்றது.
320 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணி, போராடி 96.4 ஓவர்களில் 449 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி 129 ரன்கள் முன்னிலை பெற்றது. இதையடுத்து இங்கிலாந்து அணி வெற்றி பெற 130 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
4-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில், 130 ரன்கள் இலக்கை எளிதாக எட்டி இங்கிலாந்து அணி வெற்றி பெறுமா அல்லது பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் போட்டியில் திருப்புமுனையை ஏற்படுத்துவார்களா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மிகச்சிறந்த டெஸ்ட் பந்துவீச்சு சராசரி (குறைந்தது 20 டெஸ்ட் போட்டிகள்)
பில்லி பார்ன்ஸ் (Billy Barnes) – 21 போட்டிகள் | 51 விக்கெட்டுகள் | சராசரி: 15.54
சிட்னி பார்ன்ஸ் (Sydney Barnes) – 27 போட்டிகள் | 189 விக்கெட்டுகள் | சராசரி: 16.43
பாபி பீல் (Bobby Peel) – 20 போட்டிகள் | 101 விக்கெட்டுகள் | சராசரி: 16.98
ஜானி பிரிக்ஸ் (Johnny Briggs) – 33 போட்டிகள் | 118 விக்கெட்டுகள் | சராசரி: 17.75
ராபின்சன் (Ollie Robinson) – 24 போட்டிகள் | 104 விக்கெட்டுகள் | சராசரி: 18.86
ஜஸ்பிரித் பும்ரா (Jasprit Bumrah) – 52 போட்டிகள் | 234 விக்கெட்டுகள் | சராசரி: 19.79