முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட்: இங்கிலாந்து 241 ரன்களுக்கு ஆல் அவுட்

டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட்: இங்கிலாந்து 241 ரன்களுக்கு ஆல் அவுட்
Published on: 

லாகூர்,

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து 241 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

முத்தரப்பு கிரிக்கெட்

பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து இடையேயான முத்தரப்பு கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் கடந்த 18ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

பாகிஸ்தான் - இங்கிலாந்து

இந்த கிரிக்கெட் தொடரில் லாகூரில் இன்று நடைபெற்று வரும் 4வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான், இங்கிலாந்து மோதி வருகின்றன. இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இங்கிலாந்து 241 ரன்கள்

இதனை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 46.4 ஓவரில் 241 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் தொடக்க வீரர் பென் டக்கெட் அதிகபட்சமாக 105 ரன்கள் குவித்தார். சிறப்பாக பந்து வீசிய பாகிஸ்தான் கேப்டன் ஷாகின்ஷா அப்ரடி அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் வீரர்கள் களமிறங்கி விளையாடி வருகின்றனர்.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com