பாகிஸ்தானுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு

பாகிஸ்தான் அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி களம் காண உள்ளது.
image courtesy:@icc
image courtesy:@icc
Published on

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி ஆட்டத்திற்கான 15 பேர் கொண்ட இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

செப்டம்பர் 9-ல் தொடக்கம்

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி செப்டம்பர் 9-ம் தேதி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் தொடங்குகிறது. இந்தத் தொடரில் ஏற்கனவே 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று தொடரை கைப்பற்றியுள்ள இங்கிலாந்து அணி, 3-0 என தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்புடன் களமிறங்குகிறது. இந்தத் தொடர் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27 சுழற்சியின் ஒரு பகுதியாக நடைபெறுகிறது.

ஹெடிங்லியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 103 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் 194 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

3வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி

இந்த நிலையில், இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி ஆட்டத்திற்கான 15 பேர் கொண்ட இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

ஜோ ரூட் தலைமையில் களம் காணும் இங்கிலாந்து:

* ஜோ ரூட் (கேப்டன்)

* ஜோஃப்ரா ஆர்ச்சர்

* கஸ் அட்கின்சன்

* சோனி பேக்கர்

* ஷோயப் பஷீர்

* ஹாரி புரூக்

* சாம் குக்

* ஜோர்டான் காக்ஸ்

* பென் டக்கெட்

* எமிலியோ கே

* டான் லாரன்ஸ்

* ஒல்லி போப்

* ஒல்லி ராபின்சன்

* ஜேமி ஸ்மித்

* ஜோஷ் டங்

ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com