

நாட்டிங்கம்,
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் இங்கிலாந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில் ஏற்கனவே 2 ஆட்டங்களில் நிறைவடைந்த நிலையில் 1-1 என்ற புள்ளி கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து 438 ரன்கள் குவித்தது.
இதனை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 223 ரன்கள் எடுத்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இங்கிலாந்தின் பென் டக்கெட் சதம் விளாசினார். அவர் 113 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். ஜக்கப் பெத்தல் 74 ரன்களுடனும், ரூட் 21 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். நியூசிலாந்தை விட 215 ரன்கள் பின் தங்கிய நிலையில் இங்கிலாந்து உள்ளது.