இம்ரான் தாஹிருக்கு பிளிஸ்சிஸ் புகழாரம்

தென்ஆப்பிரிக்க வீரர் இம்ரான் தாஹிருக்கு, அந்த அணியின் கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.
இம்ரான் தாஹிருக்கு பிளிஸ்சிஸ் புகழாரம்
Published on

கார்டிப்,

உலக கோப்பை கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் கார்டிப்பில் நடந்த ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி முதலாவது வெற்றியை பெற்றது. மழையால் இரண்டு முறை பாதிக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 34.1 ஓவர்களில் 125 ரன்னில் சுருண்டது. இந்த இலக்கை தென்ஆப்பிரிக்கா 28.4 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. 4 விக்கெட்டுகள் வீழ்த்திய தென்ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் 40 வயதான இம்ரான் தாஹிர் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

வெற்றிக்கு பிறகு தென்ஆப்பிரிக்க கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் கூறுகையில், இம்ரான் தாஹிரும், கிறிஸ் மோரிசும் மிடில் ஓவர்களில் அற்புதமாக பந்து வீசினர். மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்தும் திறன் மூலம் தனிநபராக அணியை வலுப்படுத்துவதில் கடந்த 2 ஆண்டுகளாக முக்கிய பங்கு வகிக்கிறார். சுழற்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்காத ஆடுகளங்களிலும் சாதிப்பதில் இம்ரான் தாஹிர் எப்போதும் சிறப்பு வாய்ந்தவர். இந்த ஆட்டத்தில் கிடைத்த வெற்றி அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களுக்கு உண்மையிலேயே உத்வேகமும், நம்பிக்கையும் அளிக்கும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com