கடைசி ஒருநாள் போட்டி: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்

கடைசி ஒரு நாள் போட்டி பஞ்சாப் மாநிலம் நியூசண்டிகாரில் இன்று நடக்கிறது.
கடைசி ஒருநாள் போட்டி: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்
Published on: 

நியூசண்டிகார்,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் திருவனந்தபுரம் மற்றும் கவுகாத்தியில் நடந்த முதல் இரு ஆட்டங்களில் இந்தியா எளிதில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி விட்டது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி பஞ்சாப் மாநிலம் நியூசண்டிகாரில் இன்று நடக்கிறது.

முந்தைய ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 405 ரன் குவித்த போதிலும் அதை இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் லின் இரட்டை செஞ்சுரி, ரோகித் சர்மாவின் சதத்தின் உதவியோடு 43.3 ஓவர்களிலேயே சர்வ சாதாரணமாக விரட்டிப்பி டித்து சாதனை படைத்தது. சூப்பர் பார்மில் உள்ள இந்தியா தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக வெல்ல முைனப்பு காட்டுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com