இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: நியூசிலாந்து அணி முன்னிலை

இங்கிலாந்து - நியூசிலாந்து இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நடந்து வருகிறது.
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: நியூசிலாந்து அணி முன்னிலை
Published on

நாட்டிங்காம்,

3-வது நாள் முடிவில் நியூசிலாந்து அணி 204 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு டெஸ்ட்கள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று, தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

நியூசிலாந்து 438 ரன்கள்

இரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்து, முதல் இன்னிங்சில் 438 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.

இங்கிலாந்து 354 ரன்கள்

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து, 2-வது நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்திருந்தது. ஜேக்கப் பெத்தேல் 74 ரன்களுடனும், ஜோ ரூட் 21 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

3-வது நாளில் தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து, 88.2 ஓவர்களில் 354 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. நியூசிலாந்து தரப்பில் நாதன் ஸ்மித் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். வில் ஓ'ரூர்கே மற்றும் ஜாக் போக்ஸ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

நியூசிலாந்து 204 ரன்கள் முன்னிலை

இதனையடுத்து 84 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து, 3-வது நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 204 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

ரச்சின் ரவீந்திரா 60 ரன்களுடனும், டேரில் மிட்செல் 26 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். போட்டியின் 4-வது நாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com