நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது 20 ஓவர் போட்டி: 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

19.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு இந்தியா 230 ரன்கள் எடுத்தது.
இந்தியா வெற்றி
Published on: 

கிறிஸ்ட்சர்ச்

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது 20 ஓவர் போட்டியில், 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஐந்து 20 ஓவர், 5 ஒரு நாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. முதலில் 20 ஓவர் தொடர் நடத்தப்படுகிறது.

நியூசிலாந்து பேட்டிங்

இதன்படி இந்தியா - நியூசிலாந்து இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.

அந்த அணியில், கிளென் பிலிப்ஸ் அரை சதம் (82 ஆட்டமிழக்கவில்லை) விளாசினார். பின் ஆலென் (45), ஜேக்கப்ஸ் (31), டேரைல் மிட்செல் (28), டிம் சீபர்ட் (24) ரன்கள் எடுத்தனர். பிரேஸ்வெல் 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 225 ரன்களை எடுத்தது. 225 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இந்தியா விளையாட தொடங்கியது.

இந்தியா வெற்றி

இதில், தொடக்க வீரரான சஞ்சு சாம்சன் அரை சதம் (67) விளாசினார். மற்றொரு தொடக்க வீரர் அபிஷேக் சர்மா (29), கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் (42), அக்சர் பட்டேல் (24), திலக் வர்மா (6), இஷான் கிஷன் (1) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

நமன் திர் (42), நிதிஷ் குமார் ரெட்டி (2) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். 19.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு இந்தியா 230 ரன்கள் எடுத்தது. இதனால், 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. 1-0 என்ற புள்ளி கணக்கில் முன்னிலையும் வகிக்கிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com