முதல் டி20 போட்டி: வங்காளதேசம் - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் நாளை மோதல்


முதல் டி20 போட்டி:  வங்காளதேசம் - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் நாளை மோதல்
x

ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வங்காளதேசம் கைப்பற்றியது.

டாக்கா,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடந்த ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வங்காளதேசம் கைப்பற்றியது.

இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி நாளை தொடங்குகிறது. இந்திய நேரப்படி நாளை மாலை 5.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

இந்த போட்டியில் வென்று தொடரை வெற்றியுடன் தொடங்க இரு அணிகளும் முனைப்பு காட்டும்.

1 More update

Next Story