

டாக்கா,
வங்காளதேசம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
அதன்படி, இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது. வங்காளதேச தலைநகர் டாக்காவில் உள்ள மைதானத்தில் இன்று காலை 9.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற வங்காளதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி வங்காளதேச அணி அணி முதலில் பேட்டிங் செய்கிறது.