

லண்டன்,
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையேயான முதல் டெஸ்ட் நாளை நடைபெற உள்ளது. இங்கிலாந்தின் லீட்ஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி நாளை மாலை 3.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற இரு அணிகளுக்கும் வாய்ப்பு மிக குறைவாக உள்ளது. ஆனாலும், இறுதிப்போட்டிக்கு தகுதிபெற இந்த டெஸ்ட் தொடர் முக்கியம் என்பதால் இந்த தொடரில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.