முதல் டெஸ்ட்: லதாம், ரவீந்திரா அபார சதம்.. வலுவான நிலையில் நியூசிலாந்து

வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 167 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
image courtesy:ICC
image courtesy:ICC
Published on

கிறைஸ்ட்சர்ச்,

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதல் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் நடந்து வருகிறது.

இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து 231 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக வில்லியம்சன் 52 ரன்கள் அடித்தார்.

இதனையடுத்து பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 75.4 ஓவர்களில் 167 ரன்னில் அடங்கியது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷாய் ஹோப் 56 ரன்கள் அடித்தார். நியூசிலாந்து தரப்பில் ஜேக்கப் டபி 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் 64 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து 2-வது நாள் ஆட்ட நேரம் முடிவில் விக்கெட் இழப்பின்றி 32 ரன்கள் எடுத்து 96 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற்றது.

தொடர்ந்து பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியில் கான்வே 37 ரன்களிலும், அடுத்து வந்த வில்லியம்சன் 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து டாம் லதாம் - ரச்சின் ரவீந்திரா ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடி அணிக்கு வலு சேர்த்தது. வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை திறம்பட சமாளித்த இந்த ஜோடியில் இருவரும் சதம் விளாசினர்.

அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் டாம் லதாம் 145 ரன்களிலும், ரவீந்திரா 176 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 3-வது நாள் முடிவில் நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 417 ரன்கள் குவித்து மொத்தம் 481 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

வில் யங் 21 ரன்களுடனும், பிரெஸ்வேல் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கெமர் ரோச் மற்றும் ஓஜய் ஷீல்ட்ஸ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளனர். நாளை 4-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com