மலிங்கா, போல்ட் கூட செய்யாத மெகா சாதனை... புதிய சரித்திரம் படைத்த ஆர்ச்சர்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஜோப்ரா ஆர்ச்சர் ஒரு அபாரமான சாதனையைப் படைத்துள்ளார்.
மலிங்கா, போல்ட் கூட செய்யாத மெகா சாதனை... புதிய சரித்திரம் படைத்த ஆர்ச்சர்
Published on

கொல்கத்தா,

ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 28-வது லீக் ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஜோப்ரா ஆர்ச்சர் ஒரு அபாரமான சாதனையைப் படைத்துள்ளார்.

156 ரன்கள் என்ற இலக்கை நோக்கி கொல்கத்தா அணி களமிறங்கியபோது, இன்னிங்ஸின் முதல் பந்திலேயே தொடக்க வீரர் டிம் சீபர்ட்டை ‘கிளீன் போல்டு’ செய்து ஆர்ச்சர் அதிர்ச்சியளித்தார். இந்த விக்கெட் மூலம், ஐபிஎல் வரலாற்றில் இன்னிங்ஸின் முதல் பந்திலேயே அதிக விக்கெட்டுகளை (5 முறை) வீழ்த்திய வீரர் என்ற முகமது ஷமியின் சாதனையை ஆர்ச்சர் சமன் செய்துள்ளார்.

இதற்கு முன்பு பிரித்வி ஷா, பிரியான்ஷ் ஆர்யா, பில் சால்ட் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோரையும் ஆர்ச்சர் தனது முதல் பந்திலேயே வெளியேற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read
ஒரே இன்னிங்ஸ்... பல உலக சாதனை... டி20-ல் புதிய வரலாறு படைத்த பாபர் அசாம்
மலிங்கா, போல்ட் கூட செய்யாத மெகா சாதனை... புதிய சரித்திரம் படைத்த ஆர்ச்சர்

ஆர்ச்சரின் இந்த சீசன் செயல்பாடுகள் புள்ளிவிவரங்களைத் தாண்டி வியக்க வைக்கின்றன. கடந்த 10 நாட்களில் மட்டும் பெங்களூரு, ஐதராபாத் மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகளுக்கு எதிரான தொடர்ச்சியான மூன்று போட்டிகளில், இன்னிங்ஸின் முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தி புதிய சரித்திரம் படைத்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில் டிரெண்ட் போல்ட், பும்ரா , லசித் மலிங்கா போன்ற ஜாம்பவான்கள் கூட எட்டாத இந்த மைல்கல்லை எட்டிய ஒரே பந்துவீச்சாளர் ஆர்ச்சர் மட்டுமே.

முதல் பந்தில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள்:

ஜோப்ரா ஆர்ச்சர்: 5 விக்கெட்டுகள்

முகமது ஷமி: 5 விக்கெட்டுகள்

டிரெண்ட் போல்ட்: 3 விக்கெட்டுகள்

உமேஷ் யாதவ்: 3 விக்கெட்டுகள்

லசித் மலிங்கா: 3 விக்கெட்டுகள்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com