பாக். டெஸ்ட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் ஆல் ரவுண்டர் நியமனம்

4-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சிக்கு அணியை வலுப்படுத்தும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
image courtesy:PTI
image courtesy:PTI
Published on

கராச்சி,

பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக அந்நாட்டின் முன்னாள் ஆல் ரவுண்டர் அசார் மக்மூத் நியமிக்கப்பட்டுள்ளார். 4-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சிக்கு அணியை நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சமீப காலமாக தடுமாறி வரும் பாகிஸ்தான் அணிக்கு இவரது வருகை வலுவாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 3 ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியிலும் பாகிஸ்தான் அணியின் செயல்பாடுகள் சிறப்பாக இல்லை. இதன் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்த முடிவை எடுத்துள்ளது.

இவரது முதல் சோதனை இந்த ஆண்டு இறுதியில் தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரில் இருந்து ஆரம்பமாக உள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com