பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சர்பராஸ் அகமது ஓய்வு

அனைத்து வடிவிலான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சர்பராஸ் அகமது ஓய்வு
Published on

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுமான சர்பராஸ் கான் அனைத்து வடிவிலான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இவரது தலைமயில் பாகிஸ்தான் இரண்டு ஐசிசி கோப்பைகளை வென்றுள்ளது. 2006-ல் 19 வயதிற்கு உட்பட்டோருக்கு உலகக் கோப்பைமற்றும் 2017-ல் சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றை வென்றுள்ளது.

பாகிஸ்தான் அணிக்காக 54 டெஸ்ட், 117 ஒருநாள் மற்றும் 61 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com