புள்ளி பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேற போவது யார்..? குஜராத்-ஐதராபாத் அணிகள் இன்று மோதல்

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்னும் எந்த அணியும் 'பிளே-ஆப் சுற்றை உறுதி செய்யவில்லை.
புள்ளி பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேற போவது யார்..? குஜராத்-ஐதராபாத் அணிகள் இன்று மோதல்
Published on

ஆமதாபாத்,

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டி உள்ளது. 'பிளே-ஆப்' சுற்றை எட்டுவதற்கு ஒவ்வொரு அணிக்கும் 8-9 வெற்றிகள் தேவையாகும். ஆனால் இன்னும் எந்த அணியும் 'பிளே-ஆப் சுற்றை உறுதி செய்யவில்லை.

இந்நிலையில் ஐ.பி.எல் தொடரில் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 56-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான குஜராத் டைட்டன்ஸ்-ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதுகின்றன.

குஜராத் அணி 11 ஆட்டங்களில் விளையாடி 7 வெற்றி (டெல்லி, லக்னோ, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, பஞ்சாப், ராஜஸ்தான் அணிகளுக்கு எதிராக), 4 தோல்வியுடன் (பஞ்சாப், ராஜஸ்தான், மும்பை, பெங்களூரு அணிகளுக்கு எதிராக) 14 புள்ளிகள் பெற்றுள்ளது. கடைசி 4 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வென்றுள்ளது.

ஐதராபாத் அணியும் 11 ஆட்டங்களில் விளையாடி 7 வெற்றி (கொல்கத்தா, 2 முறை ராஜஸ்தான், சென்னை, டெல்லி, மும்பை, பஞ்சாப் அணிகளுக்கு எதிராக), 4 தோல்வி (பெங்களூரு, லக்னோ, பஞ்சாப், கொல்கத்தா அணிகளுக்கு எதிராக) கண்டு 14 புள்ளிகள் எடுத்து இருக்கிறது.

புள்ளி பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேற ஐதராபாத், பஞ்சாப் அணிகளும் கடுமையாக மல்லுக்கட்டும். சமபலம் வாய்ந்த இந்த அணிகள் மோதும் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இவ்விரு அணிகளும் இதுவரை 6 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 5 ஆட்டத்தில் குஜராத்தும், ஒரு ஆட்டத்தில் ஐதராபாத்தும் வென்றுள்ளன.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல்:

குஜராத்:

சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), ஜோஸ் பட்லர், வாஷிங் டன் சுந்தர், ஜாசன் ஹோல்டர், ராகுல் திவேதியா, நிஷாந்த் சிந்து, ரஷித் கான், அர்ஷத் கான், ககிசோ ரபடா, முகமது சிராஜ், சாய் கிஷோர்.

ஐதராபாத்;

அபிஷேக் ஷர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன், ஹென் ரிச் கிளாசென், நிதிஷ் குமார் ரெட்டி, சலில் அரோரா, ரவிச்சந்திரன் சம ரன், கம்மின்ஸ் (கேப்டன்), ஷிவாங் குமார், இஷான் மலிங்கா, சகிப் ஹூசைன், ஹர்ஷ் துபே.

X

Daily Thanthi
www.dailythanthi.com