மகளிர் பிரீமியர் லீக் - மும்பையை வீழ்த்தி எலிமினேட்டர் சுற்றுக்கு தகுதி பெற்ற குஜராத்

மும்பை அணியை 11 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வீழ்த்தியது.
மகளிர் பிரீமியர் லீக் - மும்பையை வீழ்த்தி எலிமினேட்டர் சுற்றுக்கு தகுதி பெற்ற குஜராத்
Published on

சென்னை,

5 அணிகள் பங்கேற்றுள்ள 4-வது மகளிர் பிரீமியர் லீக்(டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 19-வது லீக் ஆட்டத்தில் மும்பை - குஜராத் அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் அஸ்லி கார்ட்னர் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது.

Also Read
மகளிர் பிரிமீயர் லீக்: மும்பை அணிக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த குஜராத்
மகளிர் பிரீமியர் லீக் - மும்பையை வீழ்த்தி எலிமினேட்டர் சுற்றுக்கு தகுதி பெற்ற குஜராத்

தொடக்கம் முதல் குஜராத் அணி வீராங்கனைகள் அதிரடியாக விளையாடினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அஸ்லி கார்ட்னர் 46 ரன்களும், ஜார்ஜ் வெறெகாம் 44 ரன்களும் எடுத்தனர்.

இதையடுத்து, 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 156 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 11 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி 5-வது வெற்றியைப் பதிவுசெய்து எலிமினேட்டர் சுற்றுக்கு முன்னேறியது.

Also Read
அனிருத் இசையில் டி20 உலக கோப்பை தொடருக்கான பாடல் வெளியீடு
மகளிர் பிரீமியர் லீக் - மும்பையை வீழ்த்தி எலிமினேட்டர் சுற்றுக்கு தகுதி பெற்ற குஜராத்

ஹர்மன்பிரீத் கவுர் தனி ஆளாகப் போராடி அரை சதம் கடந்தார். அவர் 48 பந்தில் 82 ரன் குவித்து அவுட்டாகாமல் இருந்தார்.

குஜராத் அணி சார்பில் சோபியா டிவைன், ஜார்ஜியா வேர்ஹாம் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக முதல் வெற்றியை குஜராத் ஜெயண்ட்ஸ் அணி பெற்றது

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com