வம்பிழுத்த பாக்.வீரர்.. தரமான பதிலடி கொடுத்த ஹசரங்கா.. வீடியோ வைரல்

ஆசிய கோப்பையில் இலங்கை - பாகிஸ்தான் ஆட்டத்தில் இந்த சம்பவம் நடந்தது.
வம்பிழுத்த பாக்.வீரர்.. தரமான பதிலடி கொடுத்த ஹசரங்கா.. வீடியோ வைரல்
Published on

அபுதாபி,

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு அபுதாபியில் நடந்த சூப்பர்4 சுற்றின் 3-வது ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. இதில் இலங்கை நிர்ணயித்த 134 ரன் இலக்கை பாகிஸ்தான் அணி 18 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. 2-வது தோல்வியை தழுவிய இலங்கை அணி ஏறக்குறைய இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்து விட்டது.

முன்னதாக இந்த ஆட்டத்தில் இலங்கை வீரர் ஹசரங்கா, அப்ரார் அகமது வீசிய பந்தில் அவர் கிளீன் போல்ட்டாகினார். அவரது விக்கெட்டை கைப்பற்றிய அப்ரார் அகமது, ஹசரங்கா கொண்டாடுவதை போல் அவருக்கு முன் கைகளை அசைத்து கொண்டாடி வழியனுப்பி வைத்தார்.

பொதுவாக அப்ரார் அகமது விக்கெட்டை எடுக்கும்போது கையை கட்டிக்கொண்டு தம்முடைய தலையை ஒரு பக்கமாக அசைத்துக் கொண்டாடுவார். ஆனால் ஹசரங்காவை அவுட்டாக்கிய அப்ரார் அவரைப் போலவே கொண்டாடி வம்பிழுத்தார்.

தொடர்ந்து நடைபெற்ற இந்த போட்டியில் பாகிஸ்தான் வீரர் சைம் அயுப்பை கிளீன் போல்டாக்கிய ஹசரங்கா கையை கட்டிக்கொண்டு பெவிலியினில் அமர்ந்திருந்த அப்ரார் அகமதை பார்த்து ஒரு பக்கமாக தலையை அசைத்து கொண்டாடி பதிலடி கொடுத்தார். அதாவது தம்மைப் போல் கொண்டாடி வம்பிழுத்த அப்ரார் அகமதுக்கு அவரைப்போல கொண்டாடி ஹசரங்கா தக்க பதிலடி கொடுத்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com