நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை அறிவித்த ஐசிசி!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது.
image courtesy; ICC
image courtesy; ICC
Published on

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அதன்படி நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளின் பெயர்களை ஐசிசி அறிவித்திருந்தது.

அதன்படி நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் உலகக்கோப்பை தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்து வீச்சாளரான இந்தியாவை சேர்ந்த முகமது ஷமி மற்றும் ஆஸ்திரேலிய அணி உலகக்கோப்பையை வெல்வதற்கு உதவிய முக்கிய வீரர்களான டிராவிஸ் ஹெட் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர்  இடம்பெற்றிருந்தனர்.

அதில் நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரராக ஆஸ்திரேலியாவை சேர்ந்த டிராவிஸ் ஹெட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல் சிறந்த வீராங்கனை விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் வங்காளதேசத்தை சேர்ந்த வீராங்கனைகளான நஹிதா அக்தர், பர்கானா ஹோக் மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த சாடியா இக்பால் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

அதில் நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீராங்கனையாக வங்காளதேசத்தை சேர்ந்த நஹிதா அக்தர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com