ஐசிசி விருது 2023; சிறந்த ஒருநாள் வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் 3 இந்திய வீரர்கள்....!

2023ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் வீரர் விருதுக்கு 4 பேரின் பெயர்களை ஐசிசி பரிந்துரைத்துள்ளது.
image courtesy; AFP
image courtesy; AFP
Published on

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு வருடமும் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, டி 20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது. அதன்படி 2023ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் வீரர் விருதுக்கு 4 பேரின் பெயர்களை ஐசிசி பரிந்துரைத்துள்ளது. அதில் 3 இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய அணியை சேர்ந்த வீரர்களான நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி, வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் மற்றும் நியூசிலாந்து அணியை சேர்ந்த டேரில் மிட்செல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அதேபோல் 2023ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் வீராங்கனை விருதுக்கும் 4 பேரின் பெயர்களை ஐசிசி பரிந்துரைத்துள்ளது. அதில் இலங்கையை சேர்ந்த சமாரி அதபத்து, ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த ஆஷ்லே கார்ட்னர், நியூசிலாந்து வீராங்கனை அமெலியா கெர் மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த நாட் ஸ்கிவர்-பிரண்ட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com