ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை: பந்துவீச்சாளர்கள் வரிசையில் பும்ரா முதலிடம்

டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் எந்தவித மாற்றமும் இல்லை.
ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை: பந்துவீச்சாளர்கள் வரிசையில் பும்ரா முதலிடம்
Published on

துபாய்,

பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் முதல் டெஸ்ட் முடிவடைந்துள்ளது. இதில் வீரர்களின் செயல்பாடுகளை கணக்கில் கொண்டு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), டெஸ்ட் போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா (908 புள்ளி) முதலிடத்தில் தொடருகிறார். ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் 2-வது இடத்திலும் (841 புள்ளி), தென் ஆப்பிரிக்காவின் ககிசோ ரபடா (837 புள்ளி) 3-வது இடத்திலும் உள்ளனர். இதில் குறிப்பிடத்தக்க மாற்றமாக பாகிஸ்தான் வீரர் நோமன் அலி 2 இடங்கள் முன்னேறி 9-வது இடத்தை பிடித்துள்ளார். மற்றொரு இந்திய வீரரான ஜடேஜா ஒரு இடம் சரிந்து 10-வது இடத்தில் உள்ளார்.

பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ஜோ ரூட், ஹாரி புரூக், வில்லியம்சன், ஜெய்ஸ்வால், டிராவிஸ் ஹெட் ஆகியோர் மாற்றமின்றி முறையே முதல் 5 இடங்களில் நீடிக்கிறார்கள். இந்த வரிசையில் பாகிஸ்தான் வீரர் சாத் ஷகீல் 3 இடங்கள் ஏற்றம் கண்டு 8-வது இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்க மாற்றமாகும். இந்த வரிசையில் மற்றொரு இந்திய வீரரான ரிஷப் பண்ட் ஒரு இடம் சரிந்து 10-வது இடத்தில் உள்ளார்.

ஆல் ரவுண்டர்கள் வரிசையில் பெரிய அளவில் மாற்றமில்லை. ஜடேஜா முதலிடத்தில் தொடருகிறார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com