அதிக ஐசிசி கோப்பைகளை வென்ற இந்திய வீரர்கள்... முதலிடத்தில் யார் தெரியுமா?

அதிக ஐசிசி கோப்பைகளை(10) வென்ற அணிகளில் ஆஸ்திரேலியா அணி முதலிடத்தில் உள்ளது.
அதிக ஐசிசி கோப்பைகளை வென்ற இந்திய வீரர்கள்... முதலிடத்தில் யார் தெரியுமா?
Published on

ஆமதாபாத்,

டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்து அணியை வீழ்த்து மற்றொரு கோப்பையை கைப்பற்றியது. இதன் மூலம் இந்தியா தனது 8வது ஐசிசி கோப்பையை வென்றது.

இதனைத் தொடர்ந்து, சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ஐசிசி கோப்பைகளை வென்ற இந்திய வீரர்களின் பட்டியலை தற்போது பார்ப்போம்.

இதுவரை அதிக ஐசிசி கோப்பைகளை வென்ற இந்திய வீரர்களின் பட்டியல்:

விராட் கோலி (5):

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 5 ஐசிசி கோப்பைகளை வென்றுள்ளார். 2008 யு-19 உலகக் கோப்பை, 2011 ஒருநாள் உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிரோபி, 2024 டி20 உலகக் கோப்பை மற்றும் 2025 சாம்பியன்ஸ் டிரோபி ஆகியவை இதில் அடங்கும்.

Also Read
’சென்னை மைதானம் சாம்சனின் ஆட்டத்திற்கு ஏற்றதாக இருக்கும்’ - பியூஷ் சாவ்லா
அதிக ஐசிசி கோப்பைகளை வென்ற இந்திய வீரர்கள்... முதலிடத்தில் யார் தெரியுமா?

ரோகித் சர்மா (4):

ரோகித் சர்மா 4 ஐசிசி கோப்பைகளை வென்றுள்ளார். 2007 டி20 உலகக் கோப்பை வென்ற அணியில் அவர் இடம்பெற்றார். 2024 டி20 உலகக் கோப்பையை இந்திய அணியின் கேப்டனாக வென்றார். மேலும் 2013 மற்றும் 2025 சாம்பியன்ஸ் டிரோபி கோப்பைகளையும் வென்றுள்ளார்.

ரவீந்திர ஜடேஜா(4):

ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா 2008 யு-19 உலகக் கோப்பை, 2013 மற்றும் 2025 சாம்பியன்ஸ் டிரோபி, 2024 டி20 உலகக் கோப்பை ஆகியவற்றை வென்றுள்ளார்.

Also Read
பாகிஸ்தான் வீரரை ஏலத்தில் வாங்கிய விவகாரம் - பிசிசிஐ விளக்கம்
அதிக ஐசிசி கோப்பைகளை வென்ற இந்திய வீரர்கள்... முதலிடத்தில் யார் தெரியுமா?

அர்ஷ்தீப் சிங் (4):

இந்த பட்டியலில் இளம் வீரராக உள்ள அர்ஷ்தீப் சிங் 27 வயதிலேயே 4 ஐசிசி கோப்பைகளை வென்றுள்ளார். 2018 யு-19 உலகக் கோப்பை, 2024 மற்றும் 2026 டி20 உலகக் கோப்பைகள், 2025 சாம்பியன்ஸ் டிரோபி ஆகியவை இதில் அடங்கும்.

யுவராஜ் சிங்(4):

முன்னாள் இந்திய ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங் 4 ஐசிசி கோப்பைகளை வென்றுள்ளார். 2000 யு-19 உலகக் கோப்பை, 2002 சாம்பியன்ஸ் டிரோபி, 2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 ஒருநாள் உலகக் கோப்பை வெற்றிகளில் அவர் முக்கிய பங்காற்றினார்.

அதிக ஐசிசி கோப்பைகளை(10) வென்ற அணிகளில் ஆஸ்திரேலியா அணி முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com