

மும்பை,
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடர் நிறைவடைந்துள்ள நிலையில், இந்திய அணியின் மூத்த வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா அடுத்து எந்த போட்டிகளில் விளையாட உள்ளனர் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரும் டெஸ்ட் மற்றும் 20 ஓவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டனர்.
எனினும், ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் இருவரும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றனர். இதனால் அவர்களின் அடுத்த சர்வதேச தொடர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அடுத்ததாக விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட உள்ளனர்.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. முதல் போட்டி நவம்பர் 4-ம் தேதி ஆக்லாந்தில் நடைபெறுகிறது.
அதனைத் தொடர்ந்து 2-வது போட்டி நவம்பர் 7-ம் தேதி வெலிங்டனிலும், 3-வது போட்டி நவம்பர் 10-ம் தேதி ஹேமில்டனிலும் நடைபெறுகின்றன.
4-வது மற்றும் 5-வது ஒருநாள் போட்டிகள் நவம்பர் 13 மற்றும் 15-ம் தேதிகளில் மவுண்ட் மாங்கனுயில் நடைபெற உள்ளன.
இந்த ஒருநாள் தொடருக்கு முன்னதாக இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது.
இந்தத் தொடர் அக்டோபர் 22-ம் தேதி தொடங்கி நவம்பர் 1-ம் தேதி நிறைவடைகிறது. அதன் பின்னரே ஒருநாள் தொடர் தொடங்குகிறது.