

புதுடெல்லி,
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டி20 போட்டியில் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் வைபவ் சிறப்பாக விளையாடி, 151 ரன்கள் எடுத்ததுடன் தொடர் நாயகன் விருதையும் பெற்றார். இருப்பினும், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் நான்கு போட்டிகளிலும் அவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இது தொடர்பாக அவர் கூறியதாவது,
வைபவ் சூர்யவன்ஷி தொடக்க வீரராக விளையாடுவதில்தான் சிறப்பாகச் செயல்படுவார். வைபவ் விளையாடினால், அவருக்குப் பிடித்த தொடக்க வீரர் இடத்திலேயே வாய்ப்பு வழங்க வேண்டும். அவருக்காக ஏற்கெனவே உள்ள பேட்டிங் வரிசையை மாற்றுவது சரியான முடிவாக இருக்காது.இந்திய அணியில் மாற்றங்கள் தேவைப்பட்டால், பேட்டிங்கைவிட பந்துவீச்சுப் பிரிவில் மாற்றம் செய்வதே சிறந்தது.என தெரிவித்துள்ளார்.