நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி... இந்திய வீரர்களுக்கு 35 சதவீதம் அபராதம் விதித்த ஐசிசி

ஒருநாள் தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்திய அணி
Published on: 

மவுண்ட் மாங்கனுய்,

நியூசிலாந்துக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் மெதுவாகப் பந்துவீசியதற்காக இந்திய அணி வீரர்களுக்கு அவர்களது போட்டி ஊதியத்தில் 35 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

7 ஓவர்கள் தாமதம்

கடந்த 15-ம் தேதி மவுண்ட் மாங்கனுயில் நடைபெற்ற இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்குள் பந்துவீசி முடிக்கவில்லை. இந்திய அணி 7 ஓவர்கள் குறைவாக வீசியதையடுத்து, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) விதிமுறைப்படி வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஐசிசி விதிமுறைப்படி நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்குள் வீசத் தவறிய ஒவ்வொரு ஓவருக்கும் வீரர்களின் போட்டி ஊதியத்தில் 5 சதவீதம் அபராதம் விதிக்கப்படும். அந்த வகையில், 7 ஓவர்கள் தாமதத்துக்காக மொத்தம் 35 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தொடரைக் கைப்பற்றிய இந்தியா

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 42.1 ஓவர்களில் 209 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணியை இஷான் கிஷன், அக்சர் படேல் ஆகியோர் தலா 46 ரன்கள் எடுத்து சரிவிலிருந்து மீட்டனர்.

பின்னர் 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி, இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் 48.1 ஓவர்களில் 187 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

X