

வெல்லிங்டன்,
இந்தியா, நியூசிலாந்து இடையேயான கடைசி ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது.
நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 டி20, 5 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை 3-2 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியா கைப்பற்றியது.
இதையடுத்து, நடந்த 4 ஒருநாள் போட்டிகளில் 2-1 என்ற புள்ளிகள் கணக்கில் (ஒரு ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது) இந்தியா முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், இந்தியா, நியூசிலாந்து இடையேயான கடைசி ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது. பே ஓவல் நகரில் இந்திய நேரப்படி நாளை காலை 7.30 மணிக்கு இப்போட்டி தொடங்க உள்ளது.
இப்போட்டியில் வெற்றிபெற்று ஒருநாள் தொடரை கைப்பற்ற இந்தியாவும், தொடரை சமன் செய்ய நியூசிலாந்தும் போராடும் என்பதால் நாளைய ஆட்டத்தில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது.