

ஹமில்டன்,
இந்தியா, நியூசிலாந்து இடையேயான கடைசி டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது.
நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 டி20, 5 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில் 4 டி20 போட்டிகள் நடைபெற்ற நிலையில் 3 போட்டிகளிலும் இந்தியாவும், 1 போட்டியில் நியூசிலாந்தும் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் டி20 தொடரை 3-1 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியா கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், இந்தியா, நியூசிலாந்து இடையேயான கடைசி டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது. ஹமில்டன் நகரில் உள்ள மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று மதியம் 12.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது.
இப்போட்டியில் வெற்றிபெற இரு அணிகளும் போராடும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்பிற்கு அஞ்சமிருக்காது. இப்போட்டி சோனி ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடியாக ஒளிபரப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.