3வது டி20: இந்தியா - நியூசிலாந்து இன்று மோதல்

இந்திய நேரப்படி இன்று மதியம் 12.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது.
3வது டி20: இந்தியா - நியூசிலாந்து இன்று மோதல்
Published on: 

வெலிங்டன்,

இந்தியா, நியூசிலாந்து இடையேயான 3வது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது.

இந்தியா - நியூசிலாந்து தொடர்

நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 டி20, 5 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் ஏற்கனவே 2 டி20 போட்டிகள் நடைபெற்ற நிலையில் அதில் 2 போட்டிகளிலும் இந்தியா வென்றுள்ளது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

3வது டி20

இந்நிலையில், இந்தியா, நியூசிலாந்து இடையேயான 3வது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது. நியூசிலாந்தின் வெலிங்டன் நகரில் உள்ள மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று மதியம் 12.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. சோனி ஸ்போர்ட்ஸ் சேனலில் இப்போட்டி ஒளிபரப்பாக உள்ளது.

இப்போட்டியில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்ற இந்தியாவும், முதல் வெற்றியை பதிவு செய்ய நியூசிலாந்தும் முயற்சிக்கும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது.

X

Daily Thanthi
www.dailythanthi.com